சென்னையில் பிரதமர் பங்கேற்கும் மாநாடு – இடம் ஆய்வு பணியில் பாஜக மாநிலத் தலைவர்
சென்னையில் நடைபெற உள்ள பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது X சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், மதிப்பிற்குரிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள சூழலில், அவர் பங்கேற்கும் மிகப்பெரிய மாநாடு சென்னையில் நடத்தப்படவுள்ளதாகவும், இதற்காக சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள மூன்று சாத்தியமான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வசதி ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு ஏற்ற இடத்தைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வு நிகழ்வில், அஇஅதிமுக கோவை புறநகர் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான திரு. எஸ்.பி. வேலுமணி, பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் திரு. கேசவ விநாயகம், பாஜக மாநிலச் செயலாளர் திரு. வினோஜ், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு. கிரி மற்றும் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு. குமார் ஆகியோர் உடன் கலந்து கொண்டதாகவும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.