திருப்பரங்குன்றம் விவகாரம் – எச்.ராஜா மீது காவல்துறை நடவடிக்கை
திருப்பரங்குன்றம் மலைப்பகுதி மற்றும் அதன் அடிவாரத்தில் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோருக்கு எதிராக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள கல்லத்தி மரத்தில் வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட எச்.ராஜா, பாஜக மேற்கு மாவட்டத் தலைவர் சிவலிங்கம் உள்ளிட்ட மொத்தம் 12 பேர்மீது, திருப்பரங்குன்றம் காவல் நிலையம் மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இதனிடையே, நேற்று இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட எச்.ராஜாவை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, காவல்துறை வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பெண்கள்மீதும் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.