கஞ்சா மயக்கத்தில் மருத்துவமனையில் ரகளை – காக்கா பாலாஜி கைது
செங்கல்பட்டு அருகே, கஞ்சா போதையின் தாக்கத்தில் பொதுமக்களுடன் தகராறில் ஈடுபட்டதாக பிடிபட்ட இளைஞர், மருத்துவமனையிலும் அட்டகாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு வந்தவர்களிடம், காக்கா பாலாஜி என்ற நபர் பணம் கேட்டு அச்சுறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து காவலில் எடுத்தனர்.
பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, அங்குள்ள மருத்துவர்களிடம் மரியாதையற்ற முறையில் பேசியதோடு, வழக்கு தொடர்பான ஆவணங்களையும் பறிக்க முயன்று ரகளை செய்ததாக கூறப்படுகிறது.
பரிசோதனை முடிவடைந்த பின்னர், போலீசார் அந்த இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.