விருதுநகரில் “நம்ம ஊரு மோடி பொங்கல்” விழா – உற்சாகக் கொண்டாட்டம்
விருதுநகரில் பாஜக சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா கோலாகலமாக நடைபெறியது.
தைத்திருநாள் முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாஜகவினரால் இந்த விழா கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, விருதுநகரில் கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி. பாண்டுரங்கன் தலைமையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நடக்கப் பெற்றது.
விழாவில், பாஜக மகளிர் அணியில் சேர்ந்த பெண்கள் புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அதன்பின் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உரிய உறியடி போட்டியும் நடைபெற்றது.