திருமங்கலம் அருகே முதல்வர் பயணித்த வாகனத்தில் டயர் வெடிப்பு – பரபரப்பு
மதுரை திருமங்கலம் அருகே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணித்த கார் ஒன்றின் டயர் திடீரென வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர், அதன் பின்னர் காரில் மதுரை விமான நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தனக்கன்குளம் விலக்கு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக வாகனத்தின் டயர் ஒன்று வெடித்தது.
உடனடியாக நிலைமையை உணர்ந்து செயல்பட்ட ஓட்டுநர் காரை பாதுகாப்பாக நிறுத்தியதால், பெரும் விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாற்று டயர் பொருத்தப்பட்ட பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் பாதுகாப்பாக மதுரை விமான நிலையம் நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தார்.