திருப்பரங்குன்றம் தீர்ப்பு : பட்டாசு வெடித்து, இனிப்புகள் பகிர்ந்து பாஜக கொண்டாட்டம்
திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில் தீபத்தூணில் விளக்கு ஏற்ற அனுமதி வழங்கலாம் என்ற தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உறுதி செய்துள்ளது.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை பகிர்ந்தளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
புதுச்சேரி ராஜா திரையரங்கம் சந்திப்பில் நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் திரண்டு, “அரோகரா” என முழக்கமிட்டு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.