ஆங்கில புத்தாண்டு – நயினார் நாகேந்திரன், அண்ணாமலை புத்தாண்டு வாழ்த்து!
ஆங்கில புத்தாண்டு இந்திய மக்களனைவருக்கும் மகிழ்ச்சியையும் நலனையும் வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், கடந்த காலத்தை பின்னோக்கி விட்டுவிட்டு, புதிய நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கி நடைபோடும் நாளாக இந்த நாள் அமைகிறது. புதிய எண்ணங்கள், புதிய குறிக்கோள்கள், புதிய முயற்சிகளுடன் வாழ்க்கைக்கு ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும் இந்த ஆங்கில புத்தாண்டு, இந்திய மக்கள் அனைவருக்கும் இனிமை நிறைந்ததாக அமையட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைதி, உடல் நலம், சாதனை, சந்தோஷம் ஆகியவை உங்கள் இல்லங்களையும் வாழ்க்கைப் பயணத்தையும் ஒளிவிடச் செய்யட்டும். 2026 ஆம் ஆண்டு, உங்கள் உழைப்பிற்கு உரிய பலனை அளிக்கும், நம்பிக்கைக்கு வழிகாட்டும் சிறப்பான ஆண்டாக உருவெடுக்கட்டும். இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்றும் நயினார் நாகேந்திரன் வாழ்த்தியுள்ளார்.
இதனிடையே, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், புதிய ஆண்டு தமிழக மக்களின் வாழ்வில் நம்பிக்கையும், அமைதியும் நிறைந்த காலமாக அமைய வேண்டும் என்றும், மக்கள் நலனை மையமாகக் கொண்ட வளர்ச்சி பாதையில் தமிழகம் முன்னேறும் மாற்றத்தை உருவாக்கும் ஆண்டாக இந்த வருடம் அமையட்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.
மக்களுக்கான நேர்மையான அரசியலை முன்னிறுத்தி, பொதுமக்களின் குரலாக தொடர்ந்து செயல்படுவோம் என்றும் அண்ணாமலை தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.