காஞ்சிபுரம் மாமன்ற கூட்டம்: உறுப்பினர்கள் தொடர்ச்சியாக புகார்கள் – பரபரப்பு
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், பல உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் பிரச்சினைகளை தொடர்ந்து முன்வைத்ததால் கூட்ட அரங்கில் பரபரப்பு நிலவியது.
மாநகராட்சி மேயர் மகாலட்சுமி தலைமையில் நடப்பு ஆண்டின் இறுதி மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரே அமர்வில் மொத்தம் 62 தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாஜக சார்பில் 21வது வார்டு உறுப்பினர் விஜிலாவும், 46வது வார்டு உறுப்பினர் கழல்விழியும் தங்களது வார்டுகளில் உள்ள அடிப்படை வசதி குறைகள் குறித்து பேசினர்.
அதன்பின்னர், 11, 16 மற்றும் 41வது வார்டுகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் தங்களது பகுதிகளில் நிலவும் பிரச்சினைகளை மாறி மாறி முன்வைத்தனர்.
இந்த நிலையில், புகார்கள் தெரிவித்து முடித்த மாமன்ற உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக அரங்கைவிட்டு வெளியேறியதால், கூட்டம் நிறைவடையும் முன்பே மாமன்றக் கூடம் வெறிச்சோடி காணப்பட்டது.