தூத்துக்குடி: பைபர் படகு விபத்து – மூன்று மீனவர்கள் காயம்
தூத்துக்குடி புதிய துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடல் பகுதியில் பைபர் படகு ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், மூன்று மீனவர்கள் காயமடைந்தனர்.
தூத்துக்குடி மாதவன் நாயர் காலனி பகுதியில் வசிக்கும் மூன்று மீனவர்கள், பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அப்போது புதிய துறைமுக கடற்கரை அருகே சென்றபோது, படகின் காத்தாடியில் மீன் வலை சிக்கியுள்ளது.
இதனால் படகின் சமநிலை பாதிக்கப்பட்டு, கட்டுப்பாட்டை இழந்த படகு அருகிலிருந்த பாறையில் மோதி கவிழ்ந்தது. இதில் மூன்று மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த கடலோர காவல் நிலைய போலீசார், கடலில் சிக்கிய மூவரையும் பாதுகாப்பாக மீட்டு, உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.