திருப்பூர் : இந்து அன்னையர் முன்னணி ஏற்பாட்டில் வேல் பூஜை நிகழ்வு
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் அருகேயுள்ள பகுதியில், இந்து அன்னையர் முன்னணி அமைப்பின் சார்பில் சிறப்பு வேல் பூஜை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கண்டியன்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் அலகுமலை வித்யாலயா பள்ளி வளாகத்தில் இந்த ஆன்மிக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் வேலுக்கு அபிஷேகம், சிறப்பு ஆராதனைகள் மற்றும் மகா தீப ஆராதனை ஆகியவை பக்தி பூர்வமாக நடைபெற்றன.
இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இவ்வழிபாட்டில், கந்த சஷ்டி கவசம் பாராயணம், திருமந்திர ஜபம், வில்லுப்பாட்டு போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பேரூர் ஆதீன சாந்தலிங்க மருதாசல அடிகளார், கந்த சஷ்டி கவசத்தை உச்சரிப்பதால் மனவலிமையும் வீர உணர்வும் வளருமென பக்தர்களிடம் உரையாற்றினார்.