பட்டினப்பாக்கத்தில் சுனாமி பேரழிவு நினைவு நாள் – குஷ்பு உள்ளிட்டோர் மரியாதை
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் பாஜக ஏற்பாட்டில் நடைபெற்ற சுனாமி பேரழிவு நினைவு தின நிகழ்ச்சியில், நடிகையும் பாஜக மாநில துணைத் தலைவருமான குஷ்பு உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரழிவில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
அந்த துயரச் சம்பவத்தின் 21வது ஆண்டு நினைவாக, சென்னை பட்டினப்பாக்கத்தில் பாஜக சார்பில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு, மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அவர்கள் கடற்கரையில் மலர்களை தூவி, சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.