பெருமாள் கோயிலில் விதிமுறைகளை மீறி கட்டணம் வசூலிப்பு – புகார்
வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு, சேலம் நகரில் அமைந்துள்ள கோட்டை பெருமாள் கோயிலில் விதிகளை மீறி பணம் வசூலிக்கப்படுவதாக இந்து முன்னணி அமைப்பினர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கோட்டை பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நடைபெற்று வரும் நிலையில், தரிசனத்திற்காக வருகை தரும் பக்தர்களிடமிருந்து “சிறப்பு தரிசனம்” என்ற பெயரில் கட்டணம் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெருமாள் உருவம் பதிக்கப்பட்ட காலண்டர்கள் கோயிலில் விற்பனை செய்யப்படுவதாகவும், சீர்வரிசை தட்டுகள் வழங்குவதற்காக ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்படுவதாகவும் இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
இந்த புகார்களைத் தொடர்ந்து கோயிலில் நேரில் ஆய்வு மேற்கொண்ட இந்து முன்னணி நிர்வாகிகள், சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்படுவது உறுதியாகினால், அதனை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.