சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, தொகுதிக்கு, ஐந்து பேரை தேர்வு செய்து, அவர்களில் ஒருவரை வேட்பாளராக நிறுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்தவர், ஸ்டாலினுக்கு, 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அத்துடன், தங்களின் தேர்தல் செலவுக்கு, 5 கோடி ரூபாயை தயாராக வைத்திருப்பதற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும்.வேட்பாளரிடம் பெற்ற பணத்தை, ஒவ்வொரு தொகுதியிலும் குழு அமைத்து, அவர்களிடம், 5 கோடி ரூபாய், ஸ்டாலின் மூலம் வழங்கப்படும். அப்பணத்தை, குழுவினர், ஓட்டுச்சாவடி, கட்சியினரின் செலவுக்கு பயன்படுத்திக் கொள்வர்.
சட்டசபை தேர்தலில், நோட்டீஸ், போஸ்டர், தோரணம், கட்சி அலுவலகம் திறப்பு உள்ளிட்ட பிற செலவுகளை, வேட்பாளரே மேற்கொள்ள வேண்டும் என, ஸ்டாலின் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர்.இதனால், போட்டியிடும் வாய்ப்பை எதிர்பார்த்து, ஓராண்டுக்கும் மேலாக, தொகுதியில் பணத்தை அதிகளவில் செலவு செய்து, வேலை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அதே நேரம், பிற கட்சிகளில் இருந்து, திமுகவுக்கு வந்த பெரும் புள்ளிகள், ஸ்டாலின் நிபந்தனையை ஏற்று, பணம் கட்ட தயாராவதால், பல ஆண்டாக கட்சி பணியாற்றிய, திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதன் இடையில் கனிமொழி, துர்கா ஸ்டாலின், உதயநிதி, துரைமுருகன் சிபாரிசில், போட்டியிட முயற்சி, திமுக தொண்டர்கள் வேதனை.
Facebook Comments Box