கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் இன்று வேலூர் சுற்றுப்புறப் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார்.
இன்றைய பிரசாரத்தில் முதல்வர் பேசுகையில்,
கிருபானந்த வாரியார் பிறந்தநாளான ஆகஸ்ட் 25ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும். எம்.ஜி.ஆருக்கு ‘பொன்மனச் செம்மல்’ என்ற பட்டத்தை வழங்கியவர் கிருபானந்த வாரியார் எனத் தெரிவித்தார்.
Facebook Comments Box