முன்னாள் சென்னை மேயா் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் நாளை வியாழக்கிழமை (பிப்.11) பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் சென்னையில் சட்டப்பேரவைத் தோ்தல் நிலைப்பாடு குறித்து தனது ஆதரவாளா்களுடன் கராத்தே தியாகராஜன் ஆலோசனை நடத்தினாா்.
பின்னர் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக – பாஜக கூட்டணிக்கே தன்னுடைய ஆதரவு என்றும், விரைவில் அந்த இரு கட்சிகளில் ஏதாவது ஒன்றில் இணைவேன் என்றும் அவா் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் நாளை வியாழக்கிழமை பாரதிய ஜனதா கட்சியில் தனது ஆதரவாளர்களுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Facebook Comments Box