நிகழ்ச்சி முடிந்து துணை முதல்வர், ஆளுநர் என அனைவரும் புறப்பட்டுச் சென்ற நிலையில் முதல்வரும், பிரதமர் நரேந்திர மோடியும் சுமார் 15 நிமிடங்கள் சந்தித்து பேசினர்.
இதில் தமிழக அரசியல் குறித்த ஒருசில நிகழ்வுகளை பிரதமர் மோடியிடம் முதல்வர் விளக்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிமுக – பாஜக கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை பற்றி ஆலோசித்திருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நேரு உள்விளையாட்டரங்கில் பிரதமருக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையில் முதல்வர் – பிரதமர் உடனான சந்திப்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இடம்பெறவில்லை.
Facebook Comments Box