சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்கள் நினைவிட பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலரிடம் எஸ்.ஐ ஒருவர் தவறாக நடக்க முயன்றதாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
பெண் காவலர் ஒருவர் கடந்த 12-ம் தேதி சென்னை கடற்கரையிலுள்ள தலைவர்கள் சமாதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பேரறிஞர் அண்ணா மற்றும் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவிடங்கள் பாதுகாப்பு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் என்பவர் பெண் காவலரை போனில் அழைத்து பெண் காவலரை தனியாக வரும்படி ஆசைவார்த்தைக் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பெண் காவலர் பேரறிஞர் அண்ணா மற்றும் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவிடங்கள் பாதுகாப்பு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது பெண் காவலரிடம் சப்-இன்ஸ்பெக்டர் தவறாக நடக்க முயற்சி செய்தது உண்மையென தெரியவந்தது.
இதையடுத்து தவறாக நடந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜ், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Facebook Comments Box