ஸ்ரீ சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு காஞ்சி மடத்தின் பீடாதிபதிகள் பட்டினப்பிரவேசம்
ஸ்ரீ சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆகியோர் நேற்று சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர்.
ஸ்ரீ சாரதா நவராத்திரி மஹோற்சவம் செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2 வரை, சென்னை தாம்பரம் கிழக்கு ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகாஸ்வாமி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இவ்விழாவை முன்னிட்டு பீடாதிபதிகள் செப்டம்பர் 20-ம் தேதி (நேற்று) சென்னை வந்துள்ளனர். இதையடுத்து, செப்டம்பர் 21-ம் தேதி (இன்று) மாலை 4.25 மணிக்கு திவ்ய தேச கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளனர்.
விழா காலத்தில் பிக்ஷாவந்தனம், சஹஸ்ர சண்டி மஹாயாகம், தினசரி பூஜைகள் மற்றும் பாராயணங்கள் நடைபெறும்.
செப்டம்பர் 22-ம் தேதி காலை 7.30 மணிக்கு அனுக்ஞை, குருவந்தனம், கணபதி பூஜை, சங்கல்பம், புண்ணியாகவாசனம், கலச பிரதிஷ்டை ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.
அன்றிலிருந்து அக்டோபர் 2 வரை தினமும் காலை 8.30 மணிக்கு பூஜை, சப்தசதி பாராயணம் (இருமுறை), ஹோமம், மாலை 5 மணிக்கு விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், லலிதா சஹஸ்ரநாம பாராயணம், லட்சார்ச்சனை, மகா தீபாராதனை போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மேலும், திருவிளக்கு பூஜை, அஸ்வ பூஜை, ஸ்ரீவித்யா கணபதி ஹோமம், துர்கா சுக்த ஹோமம், சூலினி துர்கா ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமம், கன்யா பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன.
விழா தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 8122853541, 9840021526, 9940369680, 7358877666, 9841446897, 9444911893 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
ஆன்மிகமும் கலாச்சாரமும் இணைந்த கல்வியை வழங்கும் நோக்கத்தில், இளைய தலைமுறையை உயர்ந்த எண்ணங்களுடன் உருவாக்கும் வகையில், தாம்பரம் கிழக்கு ராஜகீழ்ப்பாக்கத்தில் ஸ்ரீ காஞ்சி மகாஸ்வாமி வித்யா மந்திர் பள்ளி 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.