ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் நடிகை டயான் கீட்டன் காலமானார்

ஆஸ்கர் விருதைப் பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை டயான் கீட்டன் (79) உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

1968ஆம் ஆண்டு நாடக மேடைகளில் தனது நடிப்பைத் தொடங்கிய டயான் கீட்டன், 1970ஆம் ஆண்டு வெளிவந்த ‘லவ்வர்ஸ் அண்ட் அதர் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து ‘த காட்ஃபாதர்’ திரைப்படத் தொடர், ‘பிளே இட் அகெய்ன் சாம்’, ‘லவ் அண்ட் டெத்’, ‘அன்னி ஹால்’, ‘க்ரைம்ஸ் ஆஃப் த ஹார்ட்’, ‘த பர்ஸ்ட் வய்வ்ஸ் கிளப்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக 2024ஆம் ஆண்டு வெளியான ‘சம்மர் கேம்ப்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். ‘அன்னி ஹால்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெற்ற டயான் கீட்டன், தனது தனிச்சிறப்பான நடிப்பு பாணியாலும் கவர்ச்சியாலும் உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்திருந்தார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்த அவர், உடல் நலக்குறைவால் இறந்தார். டயான் கீட்டனின் மறைவுக்கு ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரை பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box