‘அரசன்’ அப்டேட்: அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம்
வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படம் ‘அரசன்’ இதற்கான இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து, அக்டோபர் 16-ம் தேதி அனிருத் பிறந்த நாளில் இப்படத்தின் அறிமுக ப்ரோமோ வெளியாகும் என்று கூறப்படுகின்றது.
இருந்தாலும் படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்பே, அனிருத் இசையமைப்பாளராக உறுதியாக இருக்கிறார் என்பது தெரிந்துவிட்டது. பின்னணி இசைக்காக அனிருத் ஸ்டூடியோவில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார் என ஒரு கலைஞர் புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டார். இதன் மூலம் அனிருத் தான் ‘அரசன்’ இசையமைப்பாளர் என்பதை உறுதி செய்யலாம்.
படத்தின் ப்ரோமோ அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும். இப்படத்தை தாணு தயாரிக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு வடசென்னையில் நடைபெற்று, இரண்டாம் கட்டம் வடசென்னை அரங்கில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.