“குட்டித் தளபதி, திடீர் தளபதி என்று சொல்கிறார்கள்… ஆனால்” – ‘மதராஸி’ பட விழாவில் சிவகார்த்திகேயன்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் கூறியதாவது:
“முருகதாஸ் சார் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ‘தீனா’, ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’ என மாஸ் படங்களை மறுவரையறை செய்தார். ரஜினிகாந்த், சல்மான் கான் போன்ற பலருடன் பணியாற்றியுள்ளார். அந்த பட்டியலில் என்னையும் சேர்த்ததற்கு நன்றி.
இந்தக் கதையை முதலில் ஷாருக் கானிடம் சொல்லியிருந்தார். அவர் செய்ய வேண்டிய படத்தை நான் செய்வது பெரிய விஷயம். ‘கோட்’ படத்தில் விஜய் அண்ணனுடன் நடித்த காட்சியில் நான் ஊக்கம் பெற்றேன். அதைத் தொடர்ந்து, பலர் என்னை ‘குட்டித் தளபதி’, ‘திடீர் தளபதி’ என்று அழைக்கிறார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. அண்ணன் அண்ணன் தான்; தம்பி தம்பிதான்.
ஒரு படம் நல்லதாக இருந்தால், அந்தக் குழுவை அழைத்து பாராட்டுவேன். ஆனால் சிலர் ‘இவனேன்னா அவ்ளோ பெரியவனா?’ என்று கேட்கிறார்கள். நல்லதைச் செய்ய நான் ஏன் யோசிக்க வேண்டும்?” எனத் தெரிவித்தார்.