‘கூலி’ மாஸ் எண்டர்டெயினராக சிறந்த படம்: உதயநிதி ஸ்டாலின்

திரைப்படம் ‘கூலி’-வை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்ததாக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எல்லா தரப்பினரையும் ஈர்க்கும் மாஸ் எண்டர்டெயினராக இந்த படம் மிகவும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்யும் நடிகர் ரஜினிகாந்தை வாழ்த்தி மகிழ்வதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திரையுலகில் தனக்கென தனி இடம் பெற்ற ரஜினிகாந்த், இந்த ஆண்டு 50 வருடங்களை நிறைவு செய்கிறார். இந்த வரலாற்றுச் சூழலில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.

நாளை வெளியாகும் ‘கூலி’ திரைப்படத்தை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் மாஸ் எண்டர்டெயினராக இது மிகச்சிறப்பாக உருவாகியுள்ளது.

‘கூலி’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெறட்டும் என, ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Facebook Comments Box