மீண்டும் உயர்ந்த தங்கம் விலை; வெள்ளி விலை அதிரடியாக உயர்வு
22 காரட் தங்க ஆபரணத்தின் விலை இன்று (அக்.13) புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதே போல், வெள்ளியின் விலையும் வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது.
தங்க விலை சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50% வரி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு, உக்ரைன்–ரஷ்யா மோதல் போன்ற காரணங்களால் தங்க விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
இன்றைய விலையில், தங்கம்:
- ஒரு கிராம் ரூ.11,525 (கிராமுக்கு ரூ.25 உயர்வு)
- ஒரு பவுன் ரூ.92,200 (பவுனுக்கு ரூ.200 உயர்வு)
வெள்ளி விலை:
- ஒரு கிராம் ரூ.195 (கிராமுக்கு ரூ.5 உயர்வு)
- ஒரு கிலோ ரூ.1,95,000 (கிலோவுக்கு ரூ.5,000 உயர்வு)
இதனால் தங்கம் மற்றும் வெள்ளி ஆர்வமுள்ளவர்களுக்கு வர்த்தகத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Facebook Comments Box