பஞ்சாபில் கொரோனா தடுப்பூசி இயக்கத்தை அதிகரிக்கும் முயற்சியாக கல்லூரிகளில் தடுப்பூசி முகாம்களை நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போடுவதையும், கல்லூரிகளில் பேராசிரியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடுவதையும் எளிதாக்கும் வகையில் மாநில அரசு இந்த சிறப்பு பிரச்சாரத்தை தொடங்கும்.
பஞ்சாப் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அரசு கல்லூரிகளில் சிறப்பு முகாம்களை அமைத்து, தகுதியுள்ள மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்குள் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கும்.
மேலும், மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மாவட்ட அளவில் சிறப்புக் குழு அமைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தலைமைச் செயலாளர் வினி மகாஜன் கேட்டுக் கொண்டார்.
முதன்மை சுகாதார செயலாளர் ஹுசைன் லால், மாநிலத்தில் சுகாதார உள்கட்டமைப்பை முறையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக ஒரு நோடல் அதிகாரி நியமிக்கப்படுவார் என்றார்.
சுகாதார உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

Facebook Comments Box