டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
காலை 11.35 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
தலைமையகத்தில் வாகன நிறுத்துமிடத்தில் முதலில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கிருந்து புகை வருவதைக் கண்டு ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறினர் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Facebook Comments Box