ராஜஸ்தானில் பேருந்து தீ விபத்து – 20 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூர் நோக்கி பயணித்த தனியார் பேருந்து நேற்று பிற்பகல் 57 பயணிகளுடன் புறப்பட்டது. பயணம் நடந்து கொண்டிருந்தபோது, போர்க் காட்சியகம் அருகே தையத் கிராமம் வந்தவுடன், பேருந்தின் பின்புறத்தில் திடீரென தீப்பற்றி வேகமாக முழு பேருந்தையும் சூழ்ந்தது.

திடீர் தீ பரவலால், பயணிகள் பலர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். இதில் 20 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் தீக்காயங்களுடன் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்க அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Facebook Comments Box