பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது தொழில்நுட்பக் கோளாறு: ஆப்கன் அமைச்சர் விளக்கம்

புதுடெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது பெரும் சர்ச்சையாகியது. இதுகுறித்து விளக்கம் அளித்த ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி, “அது வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவு அல்ல, ஒரு தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தவறு” என்று தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன. இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டு, அதில் பெண் பத்திரிகையாளர்களும் அழைக்கப்பட்டனர்.

அப்போது முட்டாகி கூறியதாவது:

“அன்று நடந்த சந்திப்பு திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது. பங்கேற்கும் பத்திரிகையாளர்களின் பட்டியல் உடனடியாகத் தீர்மானிக்கப்பட்டது. எங்களிடம் கிடைத்த பட்டியல் அடிப்படையில் மட்டுமே அழைப்புகள் அனுப்பப்பட்டன. இது வெறும் தொழில்நுட்பப் பிழை, வேறு எந்த நோக்கமும் இல்லை,” என்றார்.

இதே விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்ததாவது — “டெல்லியில் நடைபெற்ற ஆப்கான் வெளியுறவு அமைச்சர் சந்திப்பில் இந்திய வெளியுறவுத்துறைக்கு எந்த வித பங்கும் இல்லை,” எனவும் கூறியுள்ளது.

Facebook Comments Box