நெரிசலான இடங்களில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகளை உ.பி., போலீசார் கைது செய்துள்ளனர்.
உ.பி.யில் லக்னோவின் ககோரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பயங்கரவாத தடுப்புப் படைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, அவர்கள் அங்கு சென்று ஒரு சோதனை நடத்தினர். அப்போது, சந்தேக நபர்களான மினாஜ் அகமது மற்றும் மஸ்ருதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அதில், லக்னோவில் உள்ள பொது இடங்களைத் தாக்க அவர்கள் திட்டமிட்டனர்.
இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்களுக்கு அல்கொய்தாவின் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது என்று மாநிலத்தின் மூத்த போலீஸ் அதிகாரி பிரசாந்த் குமார் தெரிவித்தார்.
Facebook Comments Box