பாராளுமன்றத்தின் ‘மழைக்கால கூட்டத்தொடர்’ ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
‘இதைப் பற்றி அவர் என்ன சொன்னார்’:
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் 19 ஆம் தேதி தொடங்கி மொத்தம் 19 நாட்களுக்கு நடைபெற உள்ளது. அதன்படி ஆகஸ்ட் 13 ஆம் தேதியுடன் முடிவடையும்.
கொரோனா விதிகளின் கீழ் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஊடகங்களும் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா சோதனை கட்டாயமில்லை. ஆனால் தடுப்பூசி போடாதவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
நாடாளுமன்றத்தின் இரு அமர்வுகளும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றார்.
Facebook Comments Box