நேதாஜி ஒரு சமய நம்பிக்கை உள்ள பக்திமிக்க இந்துவாக இருந்தார். எனினும், எல்லா மத நம்பிக்கைகளுக்கும் அவர் மதிப்பளித்தார். அத்துடன் பிற மத நம்பிக்கைகளை மதிக்க வேண்டுமென தன்னை பின்பற்றுவோர், இந்திய தேசிய ராணுவத்தின் உறுப்பினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரை ஊக்குவித்தார். ஒற்றுமை, சகிப்புத்தன்மையை தனது லட்சியமாகக் கொண்டிருந்த நேதாஜி, தனது வாழ்நாள் முழுவதும் அவற்றைக் கடைபிடித்தார். அறிவொளி வீசும் நவீன இந்தியா உருவாக வேண்டும் என்று அவர் கனவு கண்டார். அதேநேரம், தனது வரலாற்று வேர்கள், தத்துவங்கள், மத கலாச்சார பாரம்பரியங்களில் இந்தியா உறுதியாக நிற்க வேண்டும் என்று விரும்பினார். நேதாஜியின் கொள்கைகள், லட்சியங்களில் இருந்து நாம் உத்வேகம் பெறுவோம். இவ்வாறு அனிதா போஸ் கூறியுள்ளார்.
The post நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எல்லா மதங்களையும் மதித்தவர்…. மகள் அனிதா போஸ் புகழாரம் appeared first on தமிழ் செய்தி.
Facebook Comments Box