Twenty-four%2BNaxals 12 பெண் நக்சல்கள் உட்பட, 24 நக்சல்கள் போலீசார் முன் சரண்
சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநில நக்சலைட்டுகளை, பயங்கரவாதத்தை கைவிட்டு வீடு திரும்புங்கள் என, மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது. இதன்படி, ஏராளமானோர் ஏற்கனவே சரண் அடைந்து உள்ளனர். இந்நிலையில், தன்டேவடா மாவட்டத்தின் பஸ்தார் பகுதியில், 12 பெண் நக்சல்கள் உட்பட, 24 நக்சல்கள் நேற்று முன்தினம் சரண் அடைந்தனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, போலீசார் முன்னிலையில் சரண் அடைந்துள்ள இவர்களில் மூவரின் தலைகளுக்கு, தலா 1 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. சரண் அடைந்த, 24 பேருக்கும் அரசு தரப்பில், தலா, 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.
அரசின் கொள்கைப்படி, அவர்களின் வளர்ச்சிக்கு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் கூறினர்.

The post 12 பெண் நக்சல்கள் உட்பட, 24 நக்சல்கள் போலீசார் முன் சரண் appeared first on தமிழ் செய்தி.

Facebook Comments Box