கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி, தற்போது நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இதற்கிடையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மே 4-ம் தேதி முதல் ஜூன் 10 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. செய்முறைத் தேர்வுகள் மார்ச் மாதம் துவங்குவதாகவும், ஜூலை 15-ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சமீபத்தில் அறிவித்தார்.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான விரிவான தேர்வு அட்டவணை பிப்ரவரி 2ம் தேதி வெளியிடப்படும் என ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மேலும் 45 ஆண்டு கால சிபிஎஸ்இ மாணவர்களின் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் கூறினார். கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்ற காரணத்தால், சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வருகிற பிப்ரவரி 2-ம் தேதி வெளியீடு appeared first on தமிழ் செய்தி.
Facebook Comments Box