%25E0%25AE%25AE%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%2B%25E0%25AE%2585%25E0%25AE%25AE%25E0%25AF%2588%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%25B9%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B7%25E0%25AF%258D%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AF%258D உலக பொருளாதாரத்தை பெருந்தொற்று கடுமையாக தாக்கியுள்ளது : மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
உலக பொருளாதார மன்றத்தின் பொது நம்பிக்கை குழுமத்தின் எல்லை தாண்டிய செயல்பாடுகளை சீரமைப்பதற்கான நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி மூலம் உரையாற்றினார்
எல்லைகளை மீண்டும் திறப்பதற்கும், அத்தியாவசிய பயணங்கள், சுற்றுலா மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை பாதுகாப்பான மற்றும் நீடித்த வகையில் மேற்கொள்வதற்கும் தேவையான கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் கூட்டு நடவடிக்கைகளை விவாதிப்பது இந்த கூட்டத்தின் நோக்கமாகும்.
எல்லைத் தாண்டிய போக்குவரத்தை கோவிட்-19 எவ்வாறு பாதித்தது என்பது குறித்து பேசிய அமைச்சர், ‘அனைத்து சமூகங்களையும், தனிநபர்களையும் பாதிக்கும் வகையில், உலக பொருளாதாரத்தை பெருந்தொற்று கடுமையாக தாக்கியுள்ளது,’ என்றார்.
துரித ஆபத்து மதிப்பீடு மற்றும் ஆபத்தை குறைத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து பேசிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், ‘பொது சுகாதார அவசரங்கள் குறித்த முக்கியமான தகவல்களை தெளிவாகவும், வெளிப்படையாகவும், துரிதமாகவும் ஆய்வு செய்து பகிர்ந்து கொள்வதன் மூலம் பொது சுகாதாரம், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுக்கிடையே சமநிலையை எட்ட வேண்டும்,’ என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், ‘இவ்வாறான எல்லைத் தாண்டிய போக்குவரத்துகளை உருவாக்குவதற்கு, சுகாதாரம், விமான சேவைகள், போக்குவரத்து மற்றும் சுற்றுலா துறைகளில் உள்ளவர்களிடையே ஒத்துழைப்பு தேவை. இதன் மூலம் பொருளாதாரத்திற்கு மேற்கொண்டு ஏற்படும் பதிப்புகளை தவிர்க்கலாம்’ என்றார்.

The post உலக பொருளாதாரத்தை பெருந்தொற்று கடுமையாக தாக்கியுள்ளது : மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் appeared first on தமிழ் செய்தி.

Facebook Comments Box