%25E0%25AE%259C%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AF%2581%2B%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%2B%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%2B1%2B%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AF%258D%2B%25E0%25AE%25AA%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B4%25E0%25AE%2595%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D ஜம்மு பிராந்தியத்தில் பிப்ரவரி 1 முதல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மீண்டும் திறப்பு... அதிகாரபூர்வ தகவல்
கொரோனா வைரஸின் கடும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த 10 மாதங்ளாக கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் மூடப்பட்டிருந்தன. நாட்டில் மெல்ல மெல்ல அதன் பாதிப்புகள் குறைந்துவரும் நிலையில் பள்ளி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன.
ஜம்மு-காஷ்மீர் அரசு உயர்கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பது தொடர்பாக வியாழக்கிழமை பல வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
இதன்படி பிப்ரவரி 1 ஆம் தேதி ஜம்முவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ உத்தரவுப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்க அனுமதிகப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர, ஜம்மு பிரிவின் காஷ்மீர் பிரிவு மற்றும் குளிர்கால மண்டல பகுதிகளில், குளிர்கால விடுமுறைக்குப் பிறகு பிப்ரவரி 15 ஆம் தேதி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும்.
உயர்கல்வித் துறை பிறப்பித்த உத்தரவின்படி கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் மாணவர்களும் கோவிட் -19 வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post ஜம்மு பிராந்தியத்தில் பிப்ரவரி 1 முதல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மீண்டும் திறப்பு… அதிகாரபூர்வ தகவல் appeared first on தமிழ் செய்தி.

Facebook Comments Box