மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இம்மாநில சட்டசபைக்கு, விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்ற, பா.ஜ., தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், திரிணமுல் காங்.,கைச் சேர்ந்த அமைச்சர்கள், சுவேந்து அதிகாரி, லஷ்மி ரத்தன் சுக்லா ஆகியோர், தங்கள் அமைச்சர் பதவிகளை சமீபத்தில் ராஜினாமா செய்தனர்.
இதில், சுவேந்து அதிகாரி, பா.ஜ.,வில் இணைந்தார். இந்த சூழலில், மம்தா பானர்ஜி அமைச்சரவையில், வனத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த ரஜிப் பானர்ஜி, சமீபத்தில் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரை சமாதானப்படுத்த திரிணமுல் காங்., தலைவர்கள் செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில், மேற்கு வங்க சட்டசபைக்கு நேற்று வந்த ரஜிப் பானர்ஜி, தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.ராஜினாமா கடிதத்தை, சபாநாயகர் பிமன் பானர்ஜியிடம் அளித்தார். அதன் பின், திரிணமுல் காங்., கட்சியில் இருந்தும் விலகுவதாக தெரிவித்தார்.
The post ரஜிப் பானர்ஜி, தன் எம்.எல்.ஏ., பதவியை நேற்று ராஜினாமா செய்ததோடு… பா.ஜ.கவில் இணைய வாய்ப்பு…! appeared first on தமிழ் செய்தி.
Facebook Comments Box