%25E0%25AE%2589%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AF%2588%2B%25E0%25AE%25AE%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B%25E0%25AE%2585%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AF%2588 மகாத்மா காந்தியின் நினைவு நாளில்... உண்மை மற்றும் அன்பின் பாதை.... குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
இந்திய மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கப் போராடிய மகாத்மா காந்தி, 1948 ஆம் ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார். அவரின் 74 நாளாவது நினைவு தினம் சனிக்கிழமை (ஜன.30) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுவதோடு, நாட்டிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை கௌரவிப்பதற்காக ஐந்து நாள்கள் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இவற்றில், 1948 இல் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட முதல் நாள் ஜனவரி 30 ஆகும். 
 
மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “ஒரு நன்றியுள்ள தேசத்தின் சார்பாக, இந்த நாளில் தியாகத்தை தழுவிக்கொண்ட தேசத்தின் தந்தை மகாத்மா காந்திக்கு எனது தாழ்மையான அஞ்சலி. அமைதி, அகிம்சை, எளிமை வழிமுறைகள், தூய்மை மற்றும் பணிவு போன்ற அவரது கொள்கைகளை நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். அவரது உண்மை மற்றும் அன்பின் பாதையைப் பின்பற்ற நாம் அனைவரும் உறுதியேற்போம்” என்று தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

The post மகாத்மா காந்தியின் நினைவு நாளில்… உண்மை மற்றும் அன்பின் பாதை…. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் appeared first on தமிழ் செய்தி.

Facebook Comments Box