இந்தியாவின் முதல் பட்ஜெட் 1860-ம் ஆண்டு, ஏப்ரல் 7-ம் தேதி ஜேம்ஸ் வில்சன் என்பவரால் தாக்கல் செய்யப்பட்டது. இவர் ஒரு பொருளாதார இதழின் நிறுவனர் ஆவார்.
இந்திய வைஸ்ராயின் ஆலோசனைக்கு இணங்க, இந்திய கவுன்சிலின் உறுப்பினராக ஜேம்ஸ் வில்சன் இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
ஜேம்ஸ் விலஸன் தான் 1853-ம் ஆண்டு சார்டட் வங்கியை தொடங்கினார். அதுதான் நாளடைவில் ஸ்டாண்டர்ட் சார்டட் வங்கியாக உருமாறியுள்ளது.
சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை, தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.கே.ஷண்முகம் ஷெட்டி 1947-ம் ஆணடு நவம்பர் 26-ம் தேதி தாக்கல் செய்தார். அப்போதைய மொத்த பட்ஜெட் அளவு 197.29 கோடி ரூபாய். அதில் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை 92.47 கோடி ரூபாய். அந்த பட்ஜெட்டின் நிதி பற்றாக்குறை 24.59 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
The post இந்தியாவின் முதல் பட்ஜெட் எப்போது யாரால் தாக்கல் செய்யப்பட்டது….? appeared first on தமிழ் செய்தி.
Facebook Comments Box