F4 இந்தியன் ரேசிங் சாம்பியன்ஷிப் – இறுதிப் போட்டி நிறைவு
சென்னை அருகே இருங்காட்டுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற F4 இந்தியன் ரேசிங் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் முதல் மூன்று இடங்களை கைப்பற்றிய வீரர்களுக்கு பரிசுத் தொகையும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
இந்த சர்வதேச தரத்திலான போட்டியில் 14-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இளம் மோட்டார் விளையாட்டு வீரர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டியின் இறுதியில், மிகக் குறைந்த நேரத்தில் பந்தயத்தை முடித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சசெல் ரோட்ஜ் முதலிடம் பெற்றார். கென்யாவைச் சேர்ந்த 15 வயது இளம் வீரர் ஷேன் சந்தாரியா இரண்டாம் இடத்தையும், இந்திய வீரர் வீர் ஷெத் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு விழா மேடையில் பரிசுகளும் கோப்பைகளும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.