சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை மேற்கொள்ள மாநில அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது? – ராமதாஸ் கேள்வி
தமிழகத்தில் சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதுடன், வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான அவரது அணியால் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அந்த தொடரில், சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பாமக ராமதாஸ் அணியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மேடையில் உரையாற்றிய டாக்டர் ராமதாஸ், “தமிழகத்தில் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை மேற்கொள்ள அரசு ஏன் முன்வர மறுக்கிறது?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், அண்டை மாநிலங்கள் ஏற்கனவே மேற்கொண்டுள்ள நடைமுறைகளை முன்மாதிரியாக கொண்டு, தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, 324 சமூகங்களுக்கும் உரிய இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.