• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஜூன் 10, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு – 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு

athibantv by athibantv
அக்டோபர் 22, 2025
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 1.1K 📋

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு – 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு

கர்நாடகாவில் உள்ள பேத்தமங்கலா மற்றும் ராமசாகர் அணைகள் நிரம்பியதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து, நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தமிழக–ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணை வழியாக 1,200 கனஅடி அளவிற்கு நீர் ஆர்ப்பரித்து பாய்ந்து வருகிறது. இதனால் பாலாற்றின் நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.

Related posts

சென்னை துறைமுகத்தில் நச்சு வாயு கசிவு விவகாரம்: தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கமளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

சென்னை துறைமுகத்தில் நச்சு வாயு கசிவு விவகாரம்: தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கமளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

ஜூன் 9, 2026
டெல்லி செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய்; நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்!

டெல்லி செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய்; நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்!

ஜூன் 9, 2026

கர்நாடக மாநிலம் நந்திதுர்கத்தில் தோன்றும் பாலாறு, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு வழியாக 348 கிலோமீட்டர் பாய்ந்து செங்கல்பட்டு அருகே வங்கக்கடலில் கலக்கிறது. கர்நாடகாவில் உள்ள பேத்தமங்கலா (3.5 TMC) மற்றும் ராமசாகர் (4.5 TMC) அணைகள் நிரம்பிய பின்பே பாலாற்றில் தமிழகத்துக்கு தண்ணீர் வரும்.

தொடர்ச்சியான மழையால் தற்போது இரு அணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகின்றன. இதன் விளைவாக, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் வழியாகப் பாயும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பேரணாம்பட்டு வழியாக மலட்டாறு 734 கனஅடி, அகரம் ஆறு 103 கனஅடி, கவுண்டன்யா ஆறு 989 கனஅடி, பொன்னை ஆறு 745 கனஅடி என மொத்தம் 3,341 கனஅடி நீர் பாலாற்றில் கலக்கிறது. வாலாஜா அணைக்கட்டில் நீர்வரத்து 4,086 கனஅடி என பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாலாறு அணைக்கட்டில் இருந்து 3 கால்வாய்கள் வழியாக 1,144 கனஅடி நீர் ஏரிகளுக்குத் திருப்பி விடப்பட்டு, 2,942 கனஅடி நீர் நேரடியாக ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக் கூடியதாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 இடங்கள், வேலூர் மாவட்டத்தில் 6 இடங்கள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 இடங்கள் அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. இதற்காக சவுக்கு கம்புகள், மணல் மூட்டைகள், ‘பொக்லைன்’ இயந்திரங்கள் ஆகியவை தயார்நிலையிலுள்ளன.

மேலும், கர்நாடகா மற்றும் ஆந்திர அரசுகளின் பொது பணித்துறை அதிகாரிகளுடன் தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் இணைந்து வாட்ஸ்‌அப் குழுவை அமைத்து, பாலாற்றில் வரும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 519 ஏரிகளில் தற்போது 50% ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. ஆண்டியப்பனூர் ஓடை, மோர்தானா, ராஜாதோப்பு அணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

சரியான முடிவு எடுக்காவிட்டால் சிரஞ்சீவியின் நிலை!” – நடிகர் விஜயை குறித்து ஆர்பி. உதயகுமார் கருத்து

Next Post

5 ஆண்டு தண்டனை: சிறையில் அடைக்கப்பட்டார் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி

Next Post

5 ஆண்டு தண்டனை: சிறையில் அடைக்கப்பட்டார் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Annamalai
  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
சென்னை துறைமுகத்தில் நச்சு வாயு கசிவு விவகாரம்: தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கமளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

சென்னை துறைமுகத்தில் நச்சு வாயு கசிவு விவகாரம்: தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கமளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

ஜூன் 9, 2026
டெல்லி செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய்; நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்!

டெல்லி செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய்; நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்!

ஜூன் 9, 2026
அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!

அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!

ஜூன் 8, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சென்னை துறைமுகத்தில் நச்சு வாயு கசிவு விவகாரம்: தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கமளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!
  • டெல்லி செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய்; நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்!
  • அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!

Category

  • Annamalai
  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

சென்னை துறைமுகத்தில் நச்சு வாயு கசிவு விவகாரம்: தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கமளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

சென்னை துறைமுகத்தில் நச்சு வாயு கசிவு விவகாரம்: தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கமளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

ஜூன் 9, 2026
டெல்லி செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய்; நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்!

டெல்லி செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய்; நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்!

ஜூன் 9, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN