9 அம்ச கோரிக்கைகளுக்கு வலியுறுத்தி கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கண்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கங்கள் நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.
சென்னை ராயபுரத்தில் அனைத்து லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், கோரிக்கைகள் நிறைவேறும் வரை லாரிகளை இயக்காது இருப்பதாக தெரிவித்தனர்.
வேலை நிறுத்தத்தின் பகுதியாக, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களைச் சார்ந்த எந்தப் பணிகளுக்கும் வாகனங்கள் இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தினர்.