ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் சங்கத்தின் காத்திருப்பு போராட்டம்!
தங்கள் கோரிக்கைகள் அரசு உத்தரவாக வெளியிடப்படும் வரை போராட்டம் ஓயாது என்று ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மேன்ஷன் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் சங்கத்தால் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி, கடந்த ஜனவரி மாதம் தங்கள் 11 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் இன்னும் அவற்றுக்கான அரசு உத்தரவை பிறப்பிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்ததில் எந்தப் பயனும் இல்லை என்று கூறிய அவர், அரசு உத்தரவு பிறப்பிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.