சனாதன தர்மம் என்பது குருட்டு நம்பிக்கை அல்ல
தமிழ்நாட்டில் உள்ள இந்துக்கள் தங்கள் மதத்தைப் பின்பற்ற சட்டப் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் பிரச்சினை தொடர்பாக அவர் ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், சனாதன தர்மம் ஒரு குருட்டு நம்பிக்கை அல்ல என்றும், அது மனிதகுலத்திற்கு அறிவியல் ஞானப் பாதையை வழங்கிய ஆன்மீக அறிவியல் என்றும் கூறினார்.
மற்றவர்கள் நம் மதத்தைத் தாக்குகிறார்கள் என்று கூறுவதற்குப் பதிலாக, முதலில் அதைப் பாதுகாக்கவும், குரல் எழுப்பவும் கற்றுக்கொள்ள வேண்டும், அப்போதுதான் நம்மைத் தாக்க யாருக்கும் தைரியம் இருக்காது என்று கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள இந்துக்கள் தங்கள் மதத்தைப் பின்பற்ற சட்டப் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது என்று கூறிய பவன் கல்யாண், இதுபோன்ற சூழ்நிலைகள் மீண்டும் நிகழாமல் இருக்க ஒவ்வொரு இந்துவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.