கோவை : ஆடு மேய்த்த தொழிலாளியை சீறிப்பாய்ந்து துரத்திய தனி யானை – காட்சி வைரல்!
கோவை மாவட்டத்தின் சிறுமுகை பகுதியில், ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு தொழிலாளியை தனித்து வந்த காட்டு யானை திடீரென சீற்றத்துடன் துரத்திய சம்பவத்துக்கான வீடியோ வெளியாகியுள்ளது.
லிங்கபுரம் காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ள புறநகர் வயல்வெளியில், சம்பவ நேரத்தில் ஒரு கூலி தொழிலாளி தனது ஆடுகளை மேய்த்துச் கொண்டிருந்தார். அதே நேரத்தில் பவானி ஆற்றில் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்த ஒற்றை யானை, திடீரென அந்த நபரை நோக்கி வேகமாக பாய்ந்தது.
யானை தன்னையே குறிவைத்திருப்பதைப் பார்த்த தொழிலாளி பரபரப்புடன் அங்கிருந்து ஓடிப்போனார். பின்னர், அப்பகுதி மக்கள் கூச்சலிட்டுப் பயமுறுத்தி யானையை அந்த இடத்திலிருந்து அகற்றினர்.