திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக எம்.பி.க்களின் ஒத்திவைப்பு நோட்டீஸ்
திருப்பரங்குன்றம் சம்பவம் குறித்து அவை ஒத்திவைத்து அவசர விவாதம் நடத்த வேண்டும் என திமுக எம்.பி.க்கள் வழங்கிய ஒத்திவைப்பு நோட்டீஸை மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஏற்க மறுத்தார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்கியதைத் தொடர்ந்து, பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த தொடரின் ஐந்தாவது நாளான இன்று, திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்பதற்காக திமுக எம்.பி.க்கள் அவையை ஒத்திவைக்க கோரி வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை ஆதரித்து திருச்சி சிவா உள்ளிட்டோர் எழுதிய மனுவை தலைவர் ராதாகிருஷ்ணன் பரிசீலித்து மறுத்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த திமுக எம்.பி.க்கள் அவைக்குள் அமளி செய்ததுடன், இறுதியில் வெளிநடப்பும் மேற்கொண்டனர்.