திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசின் அவசர மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, தேவையான ஆவணங்கள் முழுமையாக தாக்கல் செய்யப்பட்டிருந்தால், வரிசை முறையின் அடிப்படையில் மனு 2 நாட்களுக்குள் பட்டியலிடப்படும் என்று தெரிவித்தார்.