நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதற்காக திமுக எம்.பி. டி.ஆர். பாலுவை மத்திய அமைச்சர்கள் எல். முருகன் மற்றும் கிரண் ரிஜிஜு கண்டித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் தொடர்பாக மக்களவையில் விவாதம் நடத்த கோரி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குறித்து டி.ஆர். பாலு வெளியிட்ட கருத்து அரசாங்க தரப்பின் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
இந்தக் கருத்து நீதித்துறையின் கண்ணியத்திற்கு எதிரானது எனவும், அத்தகைய அவதூறு பேச்சுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் மத்திய அமைச்சர்கள் இருவரும் கண்டனம் தெரிவித்தனர்.