திருமுருகன் காந்திக்கு பத்திரிகையாளர் மன்றத்தில் சந்திப்பு அனுமதிக்கக் கூடாது – நாராயணன் திருப்பதி கண்டனம்
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற மே 17 இயக்கத்தின் செய்தியாளர் சந்திப்பில், தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அதன் செய்தியாளர் குறித்து அவதூறாக பேசியதாக மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மே 17 இயக்கம் சார்பில் மன்றத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பை செய்தி சேகரிக்க சென்ற தமிழ் ஜனம் டிவி செய்தியாளர் மீது திருமுருகன் காந்தி ஒழுங்குக்கு மாறாக கருத்து வெளியிட்டது பல்வேறு மக்களிடமிருந்து எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, “திருமுருகன் காந்தி அரசியல் மற்றும் பொதுவாழ்வில் எவ்வித முக்கியத்துவமும் இல்லாதவர்” என்று தெரிவித்ததுடன், இத்தகைய செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், நிகழ்வு பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்ததால், இனிமேலும் திருமுருகன் காந்தி அல்லது அவர் தலைமையிலான இயக்கத்துக்குப் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டாம் என சென்னை பத்திரிகையாளர் மன்றத்திடம் அவர் கேட்டுக்கொண்டார்.