திமுக அரசு இந்துக்களின் நியாயத்தை மறுக்கிறது – வேலூர் இப்ராஹிம் விமர்சனம்
பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம், திமுக அரசு இந்து மக்களின் உரிமைகளை பாதிக்கிறது என கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
ராணிப்பேட்டை ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் வழிபாடு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் வாழும் 80% இந்து மக்களின் அடிப்படை உரிமைகளை தற்போதைய அரசு மீறி வருகிறது” என்று குற்றம் சாட்டினார்.
மேலும் சனாதன தர்மம் மற்றும் இந்து சமய மரபுகளை திமுக அரசு அலட்சியப்படுத்துகிறது எனவும் அவர் தெரிவித்தார்.