மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்திற்கு புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் – அரசு அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களை நியமிக்கும் வகையில் தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பு வழங்கும் பணியும், அவர்களுக்கு தேவையான நலத்திட்டங்களை வடிவமைத்து பயனுள்ளதாக செயல்படுத்தும் பொறுப்பும் இந்த நலவாரியத்துக்கு உள்ளது.
ஏற்கனவே இருந்த அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவுற்றதால், காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மொத்தம் 233 பேர் இந்த நலவாரியத்தில் உறுப்பினராக சேர விருப்பம் தெரிவித்த நிலையில், தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் 22 பேரை தேர்வு செய்து அரசு நியமித்துள்ளது.
புதிய உறுப்பினர்கள் பட்டியலில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர் முனைவர் பூபதி, பூந்தமல்லியைச் சேர்ந்த மனோகரன், பேராசிரியர் தீபக், ஊடகவியலாளர் மகேஸ்வரி, ஜான்சிராணி உள்ளிட்ட பலர் இடம்பெற்று உள்ளனர்.